மும்பையில் கனமழை தொடரும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தொடர் கனமழையால் மும்பை மோசமான சூழ்நிலையில் இருக்கும் நிலையில், மும்பையில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 | 

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மும்பை மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகள் முழுவதும் தண்ணீரால் மூழ்கியுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், மும்பையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மும்பை நகரம், தகானு, அலிவா மற்றும் ரத்தின கிரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP