பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி பள்ளிக்கு வரத் தடை : பள்ளி முதல்வருக்கு கண்டனம்!

மாணவியை பள்ளிக்கு வர வேண்டாம் என்று, சிறுமி படித்து வரும் பள்ளியின் முதல்வர் தெரிவித்ததாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
 | 

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி பள்ளிக்கு வரத் தடை : பள்ளி முதல்வருக்கு கண்டனம்!

உத்திர பிரதேசத்தில் உள்ள அசாம்கர் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று பள்ளி செல்லும் வழியில் இரண்டு ஆண்களால் பள்ளி சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கபட்டார். இந்நிலையில் அந்த மாணவியை பள்ளிக்கு வர வேண்டாம் என்று, சிறுமி படித்து வரும் பள்ளியின் முதல்வர் தெரிவித்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என்றும்,  சிறுமியின் கல்விக்கு தடை விதிக்கும் நோக்கில் நடந்து கொண்ட பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டனர்.

 இந்த  உத்தரவின் பேரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதோடு இந்த குற்றசாட்டு தொடர்பாக பேசியுள்ள பள்ளி முதல்வர். தான் நடத்தி வருவது தனியார் பயிற்சி மையம் என்றும், இந்த பிரச்னை முடியும் வரை மட்டுமே வீட்டில் இருக்குமாறும் கூறியதாக தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP