பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து கேஸ் விலையும் உயர்வு!

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வையடுத்து கேஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது.
 | 

பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து கேஸ் விலையும் உயர்வு!

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வையடுத்து கேஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. 

கர்நாடகத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து,  பெட்ரோல், டீசல் விலை படு உயர்வை அடைந்தது. கடந்த இரண்டு தினங்களாக ஒரு பைசா, 3 பைசா என்ற சொற்ப அளவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் மற்றொரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. 

நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர்களின் விலை அதிகபட்சமாக ரூ.49.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட மானியம் பெறாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.698.50,  சென்னையில் ரூ.712.50, மும்பையில் ரூ.671.50,  கொல்கத்தாவில் ரூ.723.50 என்ற அளவில் விற்பனை செய்யப்படும். 

அதேபோன்று மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு விலை டெல்லியில் ரூ.493.55,  சென்னையில் ரூ.481.84, மும்பையில் ரூ.491.31, கொல்கத்தாவில் ரூ.496.65 என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.   

 தற்போதுள்ள நடைமுறைப்படி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் மானியத்துடன் சமையல் கேஸ் சிலிண்டர் ஆண்டுக்கு 12 வழங்கப்படுகிறது. இதற்கு மேல் தேவைப்பட்டால் சந்தை விலைக்கு ஏற்ப வாங்கிக்கொள்ளலாம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP