ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் பாஜகவில் இணைந்தார்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான பாஸ்கர ராவ், அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
 | 

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் பாஜகவில் இணைந்தார்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான பாஸ்கர ராவ், அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று 2வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது சொந்த தொகுதியான வாரணாசியில் பாஜக உறுப்பினர் சேர்ப்பு அமைப்பை தொடங்கி வைத்தார். இதே போன்று பல்வேறு மாநிலங்களில், பல்வேறு பாஜக தலைவர்கள் முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. 

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் பாஜகவில் இணைந்தார்! 

ஆந்திர மாநிலம் ஷாம்ஷாபாத்தில்(Shamshabad) நடைபெற்ற பாஜக கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பாஜக உறுப்பினர் சேர்ப்பு அமைப்பை தொடங்கி வைத்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான பாஸ்கர ராவ், அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி உருவாவதற்கு காரணமாக இருந்தவர் பாஸ்கர ராவ். பின்னர், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் உதவியுடன் ஆந்திர மாநில முதல்வராக பதவி வகித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP