பறக்கும் பாம்பை பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள்!

ஒடிசாவில் அறிய வகை பறக்கும் பாம்பை வைத்து வேடிக்கை காட்டி பிழைப்பு நடத்தி வந்த ஆசாமியை பிடித்த வனத்துறையினர், அவரிடமிருந்து அந்த பாம்பை மீட்டனர்.
 | 

பறக்கும் பாம்பை பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள்!

ஒடிசாவில் அறிய வகை பறக்கும் பாம்பை வைத்து வேடிக்கை காட்டி பிழைப்பு நடத்தி வந்த ஆசாமியை பிடித்த வனத்துறையினர், அவரிடமிருந்து அந்த பாம்பை மீட்டனர். 

பொதுவாக அடர்ந்த வனப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் அறிய வகை பறக்கும் பாம்பு, புவனேஸ்வர் பகுதியில் பொதுமக்கள் பார்வைக்கு வந்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை அதிகாரிகள் புவனேஸ்வர் விரைந்தனர். 

அங்கே, பறக்கும் பாம்பை ஒரு கூடையில் அடைத்து வைத்து பொதுமக்களிடம் காண்பித்து பிழைப்பு நடத்திவந்த பாம்பாட்டியை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அந்த பாம்பை மீட்ட அதிகாரிகள் அதை வனப்பகுதியில் விட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

இவ்வகை பாம்புகளை பிடித்து வைத்திருப்பது சட்ட விரோதம் என்பதால், அந்த நபரை பிடித்து விசாரித்து வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP