ஜூலை 5 -இல் மத்திய பட்ஜெட் தாக்கல்!

17 -ஆவது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் 17 -ஆம் தேதி தொடங்குகிறது. இதில் முக்கிய அம்சமாக, ஜூலை 5 -ஆம் தேதி, 2019 -20 -ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படவுள்ளது.
 | 

ஜூலை 5 -இல் மத்திய பட்ஜெட் தாக்கல்!

17 -ஆவது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் 17 -ஆம் தேதி தொடங்குகிறது. இதில் முக்கிய அம்சமாக, ஜூலை 5 -ஆம் தேதி, 2019 -20 -ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமது முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

முன்னதாக, மக்களவைத் தேர்தல் வரவிருந்தையடுத்து கடந்த பிப்ரவரி 1 -ஆம் தேதி, இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் (பொறுப்பு) பியூஸ் கோயல் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP