மகனின் நிலக்கரி ஒப்பந்தம் மறுக்கப்பட்டதால் செய்ல் தலைவரைத் தாக்கிய தந்தை கைது!

தன்னுடைய மகனுக்கு நிலக்கரி வழங்கும் ஒப்பந்தம் தரமறுத்ததாகக்கூறி பொதுத்துறை நிறுவனமான செய்ல் நிறுவனத்தின் தலைவர் அனில் குமார் சௌத்ரியை தாக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அசோக்குமார் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.
 | 

மகனின் நிலக்கரி ஒப்பந்தம் மறுக்கப்பட்டதால் செய்ல் தலைவரைத் தாக்கிய தந்தை கைது!

தன்னுடைய மகனுக்கு நிலக்கரி வழங்கும் ஒப்பந்தம் தரமறுத்ததாகக்கூறி பொதுத்துறை நிறுவனமான செய்ல் நிறுவனத்தின் தலைவர் அனில் குமார் சௌத்ரியை தாக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அசோக்குமார் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைநகர் டெல்லியைச் சேர்ந்த அசோக்குமார் சிங் (62) என்பவரின் மகன் அரசு நிறுவனங்களுடன் நிலக்கரி வர்த்தகம் செய்துள்ளார். அதனடிப்படையில் மத்திய அரசு நிறுவனமான இந்திய உருக்கு ஆணையத்துக்கு (செய்ல்) நிலக்கரி வழங்குவதற்காக ஒப்பந்தம் கோரியிருந்தார். ஆனால் அவர் வழங்கும் நிலக்கரி தரம் குறைந்ததாக இருப்பதாகக்கூறி  செய்ல் தலைவர் அனில் குமார் சௌத்ரி ஒப்பந்தம் வழங்க மறுத்து விட்டார்.  

இந்த தகவல் அசோக்குமார் சிங்கிற்கு தெரிய வந்ததும் அவர் ஓர் கூலிப்படையை ஏற்பாடு செய்து செய்ல் நிறுவனத் தலைவர் மீது தாக்குதல் நடத்தினார். அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டெல்லி போலீசார் கூலிப்படையைச் சேர்ந்த லலித் மற்றும் அமர்ஐித்  ஆகிய இருவரை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.  மேலும் அங்கிருந்து தப்பியோடிய  ஓம்பிரகாஷ் மற்றும் பிரவேஷ்  ஆகியோர் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் பிடிபட்டனர்.

இந்நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டது பொதுத்துறை நிறுவன தலைவர் மீது என்ற காரணத்தினால் அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது சிபிஐ துறைக்கு வழக்கு கைமாறியதும்  கூலிப்படையினரான நால்வரை ஏற்பாடு செய்த சுனில் பல்ஹாரா மற்றும் சத்யேந்தர கட்யான் என மேலும் இருவர் கைது செய்யபட்டனர்.  அசோக்குமார் சிங் மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்நிலையில் சிபிஐ அவரை தற்போது கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அசோக்குமார் சிங்,  என்னுடைய மகன் நடத்தி வரும் நிறுவனத்திடமிருந்து நிலக்கரி  வர்த்தகம் செய்வதற்கு செய்ல் நிறுவனத்துடன் 100 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம்  கையெழுத்து  இடப்பட்டது. அதையடுத்து  நிலக்கரியை இறக்குமதி செய்து  துறைமுகம் வரை வந்தடைந்த  பின்னர் அவற்றை  2 முறை  நிராகரித்த  சௌத்ரிக்குப் பாடம் கற்பிக்கவே  அவர் மீது தாக்குதல் நடத்தியாகக் குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP