மரபை மீறிய தேர்தல் ஆணையர் அசோக் லாவாசா!

பெரும்பான்மையான நபர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது என்பதை அறியாதவர் போல், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றியுள்ள அசோக் லவாசா, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மீது மரபை மீறி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்
 | 

மரபை மீறிய தேர்தல் ஆணையர் அசோக் லாவாசா!

மூன்று தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லாவாசா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் மீது எழுப்பட்ட தேர்தல் நன்னடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் மீதான விசாரணைகளின் போது தன்னுடைய கருத்தை கவனத்தில் எடுத்து தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றும் அதன் காரணமாக இனிவரும் கூட்டங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் சுனில் அரோராவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

பெரும்பான்மையான நபர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது என்பதை அறியாதவர் போல், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றியுள்ள அசோக் லவாசா தலைமைத் தேர்தல் ஆணையர் மீது மரபை மீறி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதையொட்டி, தேர்தல் பிரச்சார கூட்டங்களின்போது பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் ஆணையத்தில் பல்வேறு புகார்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

அந்த புகார்களின் மீதான விசாரணையின் போது இந்திய தலைமை தேர்தல் ஆணையர், மற்ற இரு தேர்தல் ஆணையர்களும் கலந்து கொள்வது வழக்கம்.புகார்களின் மீதான விசாரணைகளில் பெரும்பான்மை உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துக்களையே உத்தரவாக பிறப்பிக்க முடியும்.

அதன்படி இரு தேர்தல் ஆணையர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் நன்னடத்தை விதிமீறல்கள் எதுவும் நடைபெற்றுவிடவில்லை என நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் மீதான புகார்களை தேர்தல் ஆணையம் தள்ளபடி செய்திருந்தது

மரபை மீறிய தேர்தல் ஆணையர் அசோக் லாவாசா!

இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடுநிலைத் தன்மையோடு நடந்து கொள்ளவில்லை எனவும் ஆலோசனை கூட்டங்களில்  பதிவு செய்யப்பட்டிருந்த என்னுடைய கருத்துக்களின் அடிப்படையில் உத்தரவுகளைப் பிறப்பிக்கவில்லை எனவும் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிரான புகாரை விசாரிக்கும் ஆலோசனைக் கூட்டங்களில் என்னுடைய கருத்துக்கள் புறக்கனிக்கப்பட்டன. எனவே தேர்தல் தொடர்பான இனிவரும் ஆலோசனைக் கூட்டங்களில் நான் கலந்து கொள்ள மாட்டேன்" என்று மிரட்டல் விடும் தொனியில் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

மரபை மீறிய தேர்தல் ஆணையர் அசோக் லாவாசா!

வழக்கமாக தேர்தல் ஆணையம் மரபுப்படி, தலைமை தேர்தல் ஆணையர், மற்ற இரு தேர்தல் ஆணையர்கள் என மூன்று பேரில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்துக்களையே கணக்கில் எடுத்துக் கொண்டு அதன்படி உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். அதாவது மூன்று பேரில் இருவர் எடுக்கும் முடிவே இறுதியானது. இதுவே நடைமுறையாக இருந்து வருகிறது

தற்போது இந்த விவகாரத்திலும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா ஆகிய இருவரின் கருத்துக்களின்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், மற்றொரு தேர்தல் ஆணையரான அசோக் லவாசா, தன்னுடைய கருத்தை எடுத்துக்கொள்ளவில்லை என்று தற்போது கூறுவது முறையற்றது.

புகார்களின் மீது கருத்து தெரிவிக்கையில் நான் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா மீது நன்னடத்தை விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்திருந்ததை  தலைமைத் தேர்தல் ஆணையர் கணக்கில் எடுத்துகொள்ளவில்லை என்று குற்றஞ்சாட்டுவது அவரது நோக்கத்தில் பழுதுள்ளது என்றே நினைக்கத் தோன்றுகிறது.

ஏனெனில் பெரும்பான்மை உறுப்பினர்களின் தீர்ப்பே இறுதியானது. மேலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியவருக்கு இது தெரியாது என்பது நம்பக்கூடியதாக இல்லை.

நான் சொன்னதை பிறர் கேட்கவில்லை என்பது சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டாக உள்ளது. இவ்வித புகார்கள் எந்த மேல் நடவடிக்கைகளுக்கும் இட்டுச் செல்லாது என்று தெரிந்தும் அசோக் லவாசா இவ்வாறு கடிதம் எழுயிருப்பது நடைமுறையில் இல்லாத  விஷயம் ஆகும்.

தேவையற்ற சர்ச்சையையும், மக்கள் மத்தியில் தேர்தல் ஆணையத்தின் மீது அவநம்பிக்கையையும் உருவாக்கும் செயலாகவே, அசோக் லாவாசா எழுப்பியுள்ள புகாரைக் கருத வேண்டியிருக்கிறது.

மேலும், வரலாற்றில் இதுவரை நடைபெறாத ஒரு சம்பவமாக, தலைமை தேர்தல் ஆணையர் மீது புகார் அளித்து, இத்தகைய நபர்கள் இதுபோன்று மரபுகளை மீறி செயல்படுவது கண்டனத்திற்குரியதாகவே கருதப்படுகிறது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP