பாகிஸ்தான் பகுதியில் இருந்து எல்லை தாண்டி நுழைந்த ட்ரோன் ! 

பாகிஸ்தான் எல்லையிலிருந்து பறந்து வந்த ட்ரோன் ஒன்று பஞ்சாப் எல்லைக்கு அருகே 5 முறை பறந்து வந்து நோட்டமிட்டு பின்னர் இந்திய எல்லைக்குள் புகுந்துள்ளது.
 | 

பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் உள்ள ஹுசைனிவாலா எல்லையில் உள்ள சோதனைச் சாவடி  அருகே  ட்ரோன் ஒன்று பறந்துள்ளது.  இந்த ட்ரோன் பாகிஸ்தான் எல்லையிலிருந்து திங்கள் கிழமை இரவு 10 மணி முதல் இரவு 10.40 மணி வரை பறந்து கொண்டிருந்தது, பின்னர் அதிகாலை 12.25 மணியளவில் இந்திய எல்லையை கடக்கும் போது  பாதுகாப்பு துறை மூத்த  அதிகாரிகள்   உஷார் படுத்தப்பட்டுள்ளனர். .

பி.எஸ்.எஃப் மற்றும் பஞ்சாப் காவல்துறை, பிற புலனாய்வு அமைப்புகளுடன் சேர்ந்து செவ்வாய்க்கிழமை காலை முதல் எல்லை தாண்டிய ட்ரோனை தேடும்  பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் ட்ரோன்கள் வழியாக போதைப்பொருள் அல்லது வெடிமருந்துகளை அனுப்பியதா என்பதைக் கண்டறியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எல்லையைத் தாண்டி ஆயுதங்களைக் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு ட்ரோன்களை பஞ்சாப் அரசு கைப்பற்றிய  ஒரு வாரத்தில் மீண்டும் ட்ரோன் எல்லை தாண்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP