உடலுறுப்புகளை கொண்டு செல்ல ட்ரோன் விமானம்: ஜெயந்த் சின்ஹா

தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகளை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல ஆளில்லா குட்டி விமானம் பயன்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
 | 

இதுகுறித்தி மத்திய விமானத்துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது,  தானம் செய்பவர்களின் உடல் உறுப்புகளை சாலை வழியாக கொண்டு செல்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால், போக்குவரத்து நெருக்கடியில் குறிப்பிட்ட நேரத்தில் உடல் உறுப்புகளை கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் காணப்படுகிறது. 

ஆகையால், உடல் உறுப்புகளை ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ட்ரோன் என்னும் ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்கான நடவடிக்கை இன்று (டிச.1) தொடங்குகிறது. ஒரு மாதத்துக்குள் இந்த பணியை முடிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குட்டி விமானங்கள் உடல் உறுப்புகளை கொண்டு செல்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். இந்த சேவையால் நேரம் விரயமாவதை குறைக்க முடியும் என மத்தி அமைச்சர் ஜெயந்த் சின்கா  தெரிவித்தார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP