ஆதார் எண் இருக்கா? மத்திய அரசின் ரூ.30,000 பரிசை வெல்லுங்க..!

ஆதார் சேவைகள் தொடர்பான சிறந்த வீடியோக்களை அனுப்பும் நபர்களுக்கு மத்திய அரசு ரூ.30,000 வரையில் பரிசு வழங்கும் ஒரு போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.
 | 

ஆதார் எண் இருக்கா? மத்திய அரசின் ரூ.30,000 பரிசை வெல்லுங்க..!

ஆதார் சேவைகள் தொடர்பான சிறந்த வீடியோக்களை அனுப்பும் நபர்களுக்கு ரூ.30,000 வரையில் பரிசு வழங்கும் ஒரு போட்டியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) அறிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு மட்டுமின்றி முக்கிய அடையாள அட்டையாக 'ஆதார்' பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆதார் தொடர்பான சேவைகளை அனைத்து மக்களும் அறிந்துகொள்ளும் பொருட்டு, இது தொடர்பான ஒரு போட்டியினை மத்திய அரசின் இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) அறிவித்துள்ளது. அதற்கான விபரங்கள் பின்வருமாறு: 

இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும். ஆதார் எண் இருப்பது அவசியம். ஆதார் எண் இல்லையென்றால் போட்டியில் பங்கேற்க முடியாது. 

ஆதார் சேவைகள் தொடர்பாக வீடியோ 30 நிமிடங்கள் முதல் 120 நிமிடங்கள் வரை இருக்கலாம். கிராபிகல்/ அனிமேஷன் வடிவில் வீடியோ இருக்க வேண்டும். 

► ஆதார் கார்டு பதிவிறக்கம் செய்வது, ஸ்டேட்டஸ் அப்டேட், ஆதார் கார்டில் விலாசம் மாற்றுவது, தொலைந்து போன ஆதாரை மறு பதிவிறக்கம் செய்தல். பயோ மெட்ரிக் லாக்/ அன்லாக் செய்தல், இ-மெயில், மொபைல் நம்பர் சரிபார்த்தல் உள்ளிட்ட சேவைகள் தொடர்பாக வீடியோ எடுக்க வேண்டும். 

► ஒரு வீடியோவில் ஒரு சேவை குறித்த தகவல்கள் தான் இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோக்களையும் அனுப்பலாம். வீடியோவில் குரல் பதிவு தெளிவாக இருக்க வேண்டும். 

MP4, AVI, FLV, WMV, MPEG, MOV  ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வடிவத்தில் வீடியோ இருந்தால் தான் ஏற்றுக்கொள்ளப்படும். மேலும், வீடியோக்களை WeTransfer, SendSpace, DropBox, JumpShare, Hightail etc. ஆகிய வடிவத்திற்கு மாற்றி அனுப்ப வேண்டும். 

► தயார் செய்த வீடியோக்களை  media.division@uidai.net.in என்ற இ-மெயிலுக்கு போட்டியாளர்கள் தங்களது தனிப்பட்ட இ-மெயிலில் இருந்து அனுப்ப வேண்டும். 

வீடியோ அனுப்ப வேண்டிய கடைசி நாள்: ஜூலை 8, 2019 

இறுதி முடிவுகள் வெளியாகும் நாள்: ஆகஸ்ட் 31, 2019 

பரிசு விபரங்கள்:

மொத்தமுள்ள 15 ஆதார் சேவைகளில் ஒவ்வொரு பிரிவுக்கும் மூவர் தேர்ந்தெடுக்கபடுவர். அதில் முதல் பரிசு - ரூ.20,000 இரண்டாம் பரிசு - ரூ.10,000 மூன்றாம் பரிசு - ரூ.5,000 

இது தவிர ஒட்டுமொத்தமாக சிறந்த 3 வீடியோக்கள் தேர்வு செய்யப்படும். அவற்றிக்கு முதல் பரிசு - ரூ.30,000 இரண்டாம் பரிசு - ரூ.20,000 மூன்றாம் பரிசு - ரூ.10,000 வழங்கப்படும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP