மஹாராஷ்டிராவில் பாஜக- சிவசேனா கூட்டணியை முறிக்க திட்டமிடும் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி!

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 21ம் தேதி மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்றும் அக்டோபர் 24 ஆம் தேதி இடைத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

கடந்த 2014ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது தொகுதி உடன்பாடு எட்டப்படாததால் பாஜக - சிவசேனா கட்சியின் முறிவு ஏற்பட்டது. இதன் பின்னர் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணியில் போட்டியிட்டன. அப்போது இரு கட்சிகளுக்கும் இடையே சமமாக தொகுதிப் பங்கீடு செய்யப்படும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பாஜக மற்றும் சிவசேனா கட்சியினர் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது கடந்த முறை போல இல்லாமல் இந்த ஆண்டு இரு கட்சிகளுக்கும் பொதுவாக தொகுதி பங்கீடு இருக்குமென்று தெரிகிறது. 

மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணியை முறியடிக்க காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து திட்டமிட்டு வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP