Logo

இடைத்தரகர் மைக்கேலுக்கு வக்காலத்து வாங்கும் காங்கிரஸ்!

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு விவகாரத்தில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலுக்காக வழக்குரைஞரும், காங்கிரஸ் இளைஞரணி பொறுப்பாளருமான அல்ஜோ கே.ஜோசப் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

இடைத்தரகர் மைக்கேலுக்கு வக்காலத்து வாங்கும் காங்கிரஸ்!

அகஸ்டா வெஸ்ட்லேண்ட்  முறைகேடு விவகாரத்தில் இடைத்தரகர்  கிறிஸ்டியன் மைக்கேலுக்காக வழக்குரைஞரும், காங்கிரஸ் இளைஞரணி பொறுப்பாளருமான அல்ஜோ கே.ஜோசப் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட, பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல், இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு தற்போது சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ்  ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற இந்த முறைகேடு தொடர்பாக மைக்கேலிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில், காங்கிரஸ் தலைவர்கள் யார் யாரின் தலையெல்லாம் உருளும் என தெரியவில்லை.

இதனிடையே, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் கிறிஸ்டியன் மைக்கேல்  நேற்று (புதன்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர் சார்பில் காங்கிரஸ் இளைஞரணியின் சட்டப் பிரிவு தேசியப் பொறுப்பாளர் அல்ஜோ கே.ஜோசப் ஆஜரானார்.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்த முறைகேட்டில் லஞ்சம் பெற்றவர்களை கண்டறிந்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் ஒரே நோக்கத்துக்காகதான் கிறிஸ்டியன் மைக்கேல் துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில், அதே சட்டத்தின் மூலம் மைக்கேலை காப்பாற்ற காங்கிரஸ் முயற்சிப்பது நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் பெரிய அளவில்  முறைகேடு நடைபெற்றிருப்பதாக தொடர்ந்து கூறிவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மைக்கேல் கைது தொடர்பாக இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP