பாரதத்தின் மற்றுமொரு மணிமகுடம் சந்திராயன் -2!

விண்வெளி சாதனையில் இந்தியாவின் அடுத்த மைல்கல் தான் சந்திராயன் -2 விண்கலம். உலக நாடுகளிலேயே முதல் முறையாக நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக, இஸ்ரோ உருவாக்கியுள்ள சந்திராயன் -2 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது.
 | 

பாரதத்தின் மற்றுமொரு மணிமகுடம் சந்திராயன் -2!

விண்வெளி சாதனையில் இந்தியாவின் அடுத்த மைல்கல் சந்திராயன் -2 விண்கலம். எந்த நாடுகளும் இறங்கி முயற்சி செய்யாத ஒரு மாபெரும் சவாலை இஸ்ரோ(இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்) எதிர்நோக்கி களமிறங்கியுள்ளது. உலக நாடுகளிலேயே முதல் முறையாக நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக, இஸ்ரோ உருவாக்கியுள்ள சந்திராயன் -2 விண்கலம் நாளை அதிகாலை நேரத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளது. விண்கலம் மற்றும் அதற்கு தேவையான எஞ்சின் உள்ளிட்ட அனைத்துமே நம் நாட்டின் சொந்த தயாரிப்புகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

சந்திராயன் -2 விண்கலம் நாளை(ஜூலை 15) அதிகாலை 2.51 மணியளவில் விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில், இதற்கான கவுன்ட்டவுன் இன்று காலை 6.51 மணிக்கு தொடங்கியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 

பாரதத்தின் மற்றுமொரு மணிமகுடம் சந்திராயன் -2!

சந்திராயன் -2 விண்கலத்தின் எடை 3850 கிலோ. சுமார் 3.84 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்து நிலவை அடைய உள்ளது. மணிக்கு 6,000 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். 45 முதல் 60 நாட்களில் நிலவின் தென்துருவ பகுதியை அடையும். இதனை விண்ணில் செலுத்த ஜி.எஸ்.எல்.வி மார்க் 3- எம்.1 ராக்கெட் பயன்படுத்தப்படவுள்ளது. ஆர்பிட்டர், லேண்டர்(விக்ரம்) மற்றும் ரோவர் (ப்ரக்யான்) என மூன்று பகுதிகளை கொண்டுள்ளது. பல்வேறு விதமான லேசர் கருவிகளையும் இந்த விண்கலம் தன்னகத்தே கொண்டுள்ளது. சுமார்  4000 கிலோ அளவிலான எரிபொருளை கொண்டு செல்கிறது. 

இந்தியாவின் 13 பேலட்கள் மற்றும் நாசாவின் ஆராய்ச்சிக்காக 1 பேலட் என 14 பேலட்களுடன் விண்கலம் பயணம் செய்கிறது. நாசாவின் ரெட்ரோ ரெப்லெக்டர் என்ற கருவி இத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. இதனை நாசாவிற்கு எந்தவித எதிர்பார்ப்புமின்றி இஸ்ரோ செய்து கொடுப்பதாக தகவல். சந்திராயன் - 2 விண்கலத்தை உருவாக்க ஆன செலவு ரூ.978 கோடி ஆகும். இதன் ஆயுட்காலம் 1 ஆண்டுகள். 

 விண்ணில் செலுத்தப்படும் சந்திராயன்- 2 விண்கலம் நிலைநிறுத்தப்படும் இடத்தையும் அதுவே தேர்வு செய்யும் தன்மையை கொண்டுள்ளது. செப்டம்பர் மாதம் நிலவில் தரையிரங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பாரதத்தின் மற்றுமொரு மணிமகுடம் சந்திராயன் -2!

முன்னதாக சந்திராயன் -1 விண்கல சோதனை வெற்றி பெற்றதையடுத்து, தற்போது சந்திராயன் -2 விண்ணில் செலுத்தப்படுகிறது. முழுக்க முழுக்க சிமுலேஷன் எனப்படும் சந்தரனின் ஈர்ப்பு விசை  என்ன மாதிரி இருக்கும் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே சந்திராயன் -2 உருவாக்கப்பட்டு செலுத்தப்படவுள்ளது இஸ்ரோவுக்கு மிகப்பெரும் சவால் தான்.

சந்திராயன் -1 செலுத்தும்போது 'ஹார்டு லேண்ட்லிங்' முறையில் தான் சந்திரனில் தரையிறக்கப்பட்டு அங்கு அது நிலைநிறுத்தப்பட்டது. இந்த முறை ஆய்வின்  அடிப்படையில் 'சாப்ட் லேண்ட்லிங்' முறையில் நிலைநிறுத்தப்படுவதும் இஸ்ரோவுக்கு பெரும் சவாலாகவே இருக்கிறது. 

அவ்வாறு பாதுகாப்பாக நிலைநிறுத்தப்படும் பட்சத்தில் நிலவில் இருக்கும் சூழல் குறித்து பல்வேறு முக்கிய தகவல்கள் நமக்கு கிடைக்கும். இதன்மூலமாக உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் பெருமை கூடும். விண்வெளி சாதனையில் இந்தியாவின் மைல்கல் என்று சொல்லலாம்.  நிலவின் மேற்பரப்பில் அரிதிலும் அரிதான ஹீலியம் வாயு உள்ளதாகக் கருதப்படுகிறது. மேலும் நீர் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த இரண்டு குறித்தும் சந்திராயன் -2 இல் அனுப்பப்படும் லேண்ட ரோவர் வாகனம் ஆய்வுகள் மேற்கொண்டு இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறைக்கு அதுகுறித்த தகவல்களை அனுப்ப  உள்ளது.

இந்த சாதனையின் தொடர்ச்சியாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என இஸ்ரோ ஏற்கனவே தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP