சந்திரபாபு நாயுடுவுக்கு கூட்டணியில் இடமில்லை: அமித் ஷா திட்டவட்டம்

ஆந்திர மாநில முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இடமில்லை, என பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 | 

ஆந்திராவில் உள்ள ஸ்ரீகக்குளம் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷா, 2019 தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என கூறினார். அப்படி ஆட்சி அமைக்கும்போது, சந்திரபாபு நாயுடு திரும்ப வந்தாலும் அவரை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளப் போவதில்லை, என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

"ஆந்திர மக்கள் மற்றும் பாரதிய ஜனதா தொண்டர்களிடம் உறுதியளிக்கிறேன். சந்திரபாபு நாயுடுவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவுகள் நிரந்தரமாக மூடப்பட்டு விட்டன" என்று கூறினார்.

மேலும், "10 ஆண்டுகளாக சந்திரபாபு நாயுடு திரிந்து வந்தார். அவர் ஆட்சிக்கு வரமுடியாது என்று தெரிந்தவுடன், தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தார். ஆட்சி கிடைத்தவுடன் கூட்டணியை விட்டு சென்று மோடிக்கு எதிராக பேசி வருகிறார்" என்றும் ஷா கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP