காந்திகளுக்கும், மன்மோகன் சிங்கிற்கும் ரத்து செய்யப்பட்ட சிறப்பு பாதுகாப்பு படை தீர்மானத்தில் மத்திய அரசின் முடிவே இறுதியானது - மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டம்!!!

மன்மோகன் சிங்கை தொடர்ந்து, சமீபத்தில் காங்கிரஸ் தலைவர்களான சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி மூவருக்கும் அளிக்கப்பட்டு வந்த "கருப்பு பூணை" எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படைகளை ரத்து செய்து, அவர்களுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது மத்திய அரசின் முடிவிற்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் முன்வைக்கப்படும் நிலையிலும், அவர்களுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு தான் வழங்கப்படும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
 | 

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுத்தொடரில், காந்திகளுக்கும், மன்மோகன் சிங்கிற்கும் ரத்து செய்யப்பட்டுள்ள சிறப்பு பாதுகாப்பு படையை திரும்ப வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் ஷர்மா. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் இந்திய பிரதமருமான இந்திரா காந்தியின் மகளும், முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்திக்கும், அவரது பிள்ளைகளுக்கும் சிறப்பு பாதுகாப்பு படை பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்துள்ளது. முன்னாள் தலைவர் மன்மோகன் சிங்கும் இந்திய தலைவர்களுள் மிக முக்கியமான ஒருவர்.

அப்படியிருக்க அவர்களுக்கான பாதுகாப்பை ரத்து செய்ய உத்தரவு பிறப்பித்திருக்கும் மத்திய அரசு தனது தனிப்பட்ட பிரச்சனைகளை கருத்தில் கொண்டே இத்தகைய முடிவை எடுத்திருப்பதாகவும், இது சரியல்ல என்பதால், அவர்களுக்கு மீண்டும் சிறப்பு பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார் அக்கட்சி தலைவர் ஆனந்த் ஷர்மா.

இவரின் கருத்துக்கு பதிலளித்துள்ள பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஜெ.பி.நட்டா, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்தை தொடர்ந்து, இவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல்கள் இருந்த நிலையில், சிறப்பு படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டது. தற்போது எந்த அச்சுறுத்தல்களும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகே இந்த பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த அரசியல் காரணமும் இல்லை என்று கூறியுள்ளார். 

இவரை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு படையை நீக்கப்பட்டுள்ள போதும், இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசின் இந்த முடிவே இறுதியானது என்றும், காங்கிரஸ் தரப்பினர் எத்தனை முறை இதை பற்றிய கருத்துக்களை முன்வைத்தாலும், மத்திய அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP