2021 இல் டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: அமித்ஷா

2021 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு செல்போன் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு நடத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
 | 

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, "2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, மொபைல் செயலி மூலம் கணக்கெடுக்கப்பட உள்ளது. காகித கணக்கெடுப்பில் இருந்து டிஜிட்டல் கணக்கெடுப்பு முறைக்கு மாறும் முதல் கணக்கெடுப்பாக இது அமையும்.  

பாஸ்போர்ட், ஆதார் மற்றும் வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு பல்நோக்கு அடையாள அட்டையை ஒரே அடையாள அட்டையாக கொண்டு வர வாய்ப்புகள் உருவாகும். இந்த கணக்கெடுப்பு மத்திய அரசின் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க உதவும். 2011 ஆம் ஆண்டு நடந்த இந்தியாவின் கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பில் நாட்டின் மக்கள் தொகை 121 கோடியாக இருந்தது என தெரிவித்தார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP