ப.சிதம்பரத்தின் வீட்டிற்குள் எகிறி குதித்த சிபிஐ அதிகாரிகள்!

ப.சிதம்பரம் கைது செய்யப்படவே வாய்ப்பு அதிகமாக இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் ப.சிதம்பரத்தின் பூட்டப்பட்டிருப்பதை அடுத்து, சுவற்றில் எகிறி குதித்து அதிகாரிகள் உள்நுழைந்தனர்.
 | 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மீதான முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.  இதை அடுத்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இதற்கிடையே சிதம்பரத்தை கைது செய்யும் முயற்சியில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் இறங்கினர். டெல்லி ஜோர்பார்க்கில் உள்ள அவரது வீடு, அலுவலகங்களில் அதிகாரிகள் முற்றுகையிட்டு வருகின்றனர். இந்த நிலையில், அவரை கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிதம்பரத்தின் வீட்டிற்கு வெளியே  காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

சிதம்பரத்தின் காரை பின்தொடர்ந்து வந்த சிபிஐ, அமலாக்கத்துறையினர் வீட்டிற்குள் வந்துள்ளனர். வீட்டின் கதவு பூட்டப்பட்டதையடுத்து,  வீட்டின் பின்பக்கம் வழியாகவும், அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP