ரொக்க பண பரிவர்த்தனையா? உஷார்... கிடுக்கிப்பிடி போடும் வருமான வரித் துறை!

ரொக்க பண பரிவர்த்தனையா? உஷார்... கிடுக்கிபிடி போடும் வருமான வரித் துறை!
 | 

ரொக்க பண பரிவர்த்தனையா? உஷார்... கிடுக்கிப்பிடி போடும் வருமான வரித் துறை!

ரூ.20,000-க்கும் மேல் ரொக்க பணபரிவர்த்தனையின் மூலம் அசையா சொத்துகள் வாங்கியிருப்போரிடம் அதற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வருமான வரித் துறை  முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக டெல்லியில் இந்தப் பணியை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கருப்புப் பணம்  முதலீடு செய்யப்படுவதில், நிலம் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதனை ஒழிக்கும் வகையில், கடந்த 2015 -இல் வருமான வரிச் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

2015 ஜூன் 1 -ஆம் தேதி அமலுக்கு வந்த இச்சட்டத் திருத்தத்தின்படி, விளை நிலங்கள் விற்பனை உள்ளிட்ட ரியல் எஸ்டேட் சம்பந்தமான ரூ.20,000-க்கும் மேற்பட்ட பணபரிவர்த்தனைகள் காசோலைகள் மூலமாகவோ, மின்னணு பரிவர்த்தனை வாயிலாகவோ மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்தச் சட்ட நடைமுறை குறித்து, டெல்லியின் பல்வேறு பகுதிகளில் உள்ள 21 சார் - பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித் துறை அண்மையில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் 2015 ஜூன்  1 -ஆம் தேதி முதல் 2018 டிசம்பர் 31- ஆம் தேதி வரை, ரொக்க பரிவர்த்தனைகளின் மூலம்  வாங்கப்பட்டுள்ள சொத்துக்களின் விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளோரிடம் வருவாய்க்கான மூலஆதாரம், சட்டத்தை மீறி ரொக்க பணபரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டதற்கான காரணம் உள்ளிட்டவை குறித்து உரிய விளக்கம் கேட்டு விரைவில் நோட்டீஸ் அனுப்ப வருமான வரித் துறை முடிவு செய்துள்ளது.

newstm.in
 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP