அடிக்க முடியல; ‛பில்டப்’ ஆவது குடுக்குறோமே... கதறும் பாகிஸ்தான்!

பாக்., வான் எல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக, பாக்., ராணுவம் அறிவித்துள்ளது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன், நம் நாட்டில் நடந்த விமான விபத்து குறித்த வீடியோ காட்சிகளை பயன்படுத்தி, அந்நாட்டு ராணுவமும், மீடியாக்களும் பொய் செய்திகளை பரப்பி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
 | 

புல்வாமா தாக்குதலுக்கு, நம் விமானப் படை அளித்த பதிலடியை தொடர்ந்து, இந்தியா - பாக்., இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்தியாவுக்கு சரியான பதிலடி கொடுப்போம் என, பாக்., ராணுவமும், அந்நாட்டு அரசும் கொக்கரிக்கின்றன. 

இந்நிலையில், பாக்., வான் எல்லையில் நுழைய முயன்ற நம் விமானப்படை விமானத்தை அவர்கள் சுட்டு வீழ்த்தியதாக, பாக்., ராணுவம் அறிவித்துள்ளது. இது குறித்த வீடியோ காட்சிகளுடன், அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. 

இந்த தகவலை மறுத்துள்ள நம் ராணுவம், நம் விமானங்கள் ஏதும் சுடப்படவில்லை என்றும், நம் வீரர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், பாக்., ஊடகங்கள் ஒளிபரப்பும் வீடியோவை ஆராய்ந்ததில், அவை, சில ஆண்டுகளுக்கு முன், நம் நாட்டிற்குள் விபத்தில் சிக்கி விமானம் வீழ்ந்த வீடியோவை, பாக்., ஊடகங்கள் தவறாக பயன்படுத்தி, போலி செய்தி பரப்புவது கண்டறியப்பட்டுள்ளது. 

இதை, நம் நாட்டு ஊடகங்கள் கண்டறிந்து தகவல் வெளியிட்டுள்ளன. இதை பார்த்த, பாக்., ஊடகங்கள் மற்றும் ராணுவத்தினர், ‛‛நிஜத்தில் தான் இந்தியாவை தாக்க முடியவில்லை; எங்கள் நாட்டு மக்கள் எங்களை மதிப்பதற்காக பில்டப் ஆவது தருகிறோம். அதையும் விடமாட்டேன் என்கிறீர்களே’’ என புலம்பி வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP