தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
 | 

தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 

மருத்துவக் கல்வி முறையில் சில மாற்றங்கள் செய்யும் பொருட்டு ஏற்கனவே இருந்த அமைப்பான இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது. 

இன்று டெல்லியில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

இதன்படி, முதுகலை மருத்துவ படிப்பில் சேர, 'நேஷனல் எக்ஸிட் டெஸ்ட்'(National Exit Test) என்ற பெயரில் ஒரே தேர்வு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் உள்ளிட்ட தேசிய நிறுவனங்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP