ரோஹிங்கியாக்களை வெளியேற்ற இந்தியாவின் உதவியை நாடும் பங்களாதேஷ்?

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா முதல்முறையாக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள சமயத்தில் ரோஹிங்கியாக்களை மீண்டும் மியான்மருக்கு திருப்பி அனுப்ப இந்தியாவின் உதவியை நாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 | 

ரோஹிங்கியாக்களை வெளியேற்ற இந்தியாவின் உதவியை நாடும் பங்களாதேஷ்?

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா முதல்முறையாக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள சமயத்தில் வங்கதேசத்தில் குடியேறியுள்ள ரோஹிங்கியாக்களை மீண்டும் மியான்மருக்கு திருப்பி அனுப்ப இந்தியாவின் உதவியை நாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா முதல்முறையாக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். வருகிற அக்டோபர் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை அவர் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார். பங்களாதேஷ் பிரதமரை வரவேற்க இந்தியாவும் தயாராக இருக்கிறது. 

இரு நாட்டு பிரதமர்களும் சந்திக்கும் இந்த தருணத்தில் இவர்கள் எதைப்பற்றி பேசுவார்கள் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த வகையில் என்.ஆர்.சி குறித்தே அவர்கள் பேச வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. சட்டவிரோதமாக பங்களாதேஷிற்கு குடியேறியவர்களை நாடு கடத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தெரிகிறது.

வங்கதேசத்தில் குடிபுகுந்துள்ள ரோஹிங்கியாக்களை மீண்டும் மியான்மருக்கு திருப்பி அனுப்பும் சூழ்நிலையும் உருவாகலாம்.  ரோஹிங்கியாக்களை உடனடியாக வெளியேற்றினால் தான் அது நாட்டிற்கு சிறந்தது என்றும் அவ்வாறு முடியாத பட்சத்தில் அவர்கள் விரக்தியில் நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறுவார்கள் என்றும் பங்களாதேஷின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

சமீப காலங்களில் பங்களாதேஷ் இந்தியாவின் முக்கிய நட்பு நாடுகளில் ஒன்றாக மாறிவிட்டது. சிறப்பு அந்தஸ்து 370 காஷ்மீர் ரத்து செய்யப்பட்ட போது கூட இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று பங்களாதேஷ் தலையிடாமல் இருந்தது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியாவிற்கு ஆதரவாகவே பங்களாதேஷ் தனது கருத்தை முன்வைத்தது.

ராணுவம், எரிசக்தி, போக்குவரத்து இணைப்புகள் என அனைத்திலும் இந்தியாவும் பங்களாதேஷூம் இணைந்து செயல்படுகின்றன. தற்போது ரோஹிங்கியாக்களை மியான்மருக்கு திருப்பி அனுப்புவதற்கு இந்தியாவின் உதவியை பங்களாதேஷ் நாட நேரிடும். அதற்கு பதிலாக அசாம் என்.ஆர்.சி விவாகரத்தில் பங்களாதேஷ் இந்தியாவிற்கு உதவி செய்ய முன்வரலாம். இதன்மூலம் இரு நாடுகளின் பிரச்சினையும் தீர்க்கப்படும். தெற்கு ஆசியாவில் மக்கள் அமைதியாக வாழ இது ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும் என்ற கருத்தும் இங்கு முன்வைக்கப்பட வைக்கவுள்ளதாகத் தெரிகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP