அருண் ஜெட்லிக்கு கெளரவம்: டெல்லி மைதானத்திற்கு ஜெட்லியின் பெயர்!

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை கௌரவப்படுத்தும் விதமாக டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்திற்கு ஜெட்லியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 | 

பாஜக மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி மரணமடைந்தார். இவரது மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் அருண் ஜெட்லியை கௌரவப்படுத்தும் விதமாக டெல்லியிலுள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்திற்கு ஜெட்லியின் பெயரை சூட்டி மத்திய அரசு உத்தரவிட்டது.இன்று கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, கிரிக்கெட் வீரர்கள், அருண் ஜெட்லியின் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டனர். அதேபோன்று மைதானத்தின் பெவிலியன் ஒன்றுக்கு விராட் கோலியின் பெயர் சூட்டப்பட்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP