அருண் ஜெட்லி கவலைக்கிடம்? எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை!

மத்திய முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இன்னும் சற்று நேரத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி சுவாசக்கோளாறு மற்றும் உடல் பலவீனம் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவ சோதனையில், இருதயம் மற்றும் நுரையீரல் சரியாக செயல்படாதது கண்டறியப்பட்டது. இதையடுத்து இதயம் முறையாக இயங்குவதற்கு மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் வழக்கத்தைவிட கூடுதலான செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

அருண்ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வந்த தகவலையடுத்து, குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஹர்ஷ் வர்தன் ஆகியோர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்தனர். 

இந்த நிலையில், பூடான் சென்று இன்று டெல்லி திரும்பிய  பிரதமர் நரேந்திர மோடி இன்னும் சற்று நேரத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பிரதமருடன் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP