காஷ்மீரைத் தொடர்ந்து பஞ்சாபிலும் விமான சேவை நிறுத்தம்!

பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்மு காஷ்மீரைத் தொடர்ந்து பஞ்சாபிலும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், அமிர்தசரஸ் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு உடனடி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 | 

காஷ்மீரைத் தொடர்ந்து பஞ்சாபிலும் விமான சேவை நிறுத்தம்!

பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்மு காஷ்மீரைத் தொடர்ந்து பஞ்சாப் அமிர்தசரஸிலும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் எல்லைப்பகுதி பாதுகாப்பு குறித்து நேரில் சென்று ஆய்வு நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்று அதிகாலை 12 'மிராஜ் 2000' ரக போர் விமானங்கள், 1000 கிலோ எடை வெடிபொருட்களுடன் சென்று பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை தாக்கியது. 

இதனால் பாகிஸ்தான் போர் விமானங்கள் எல்லையில் நுழைய முயற்சி செய்து வருகிறது. இன்று காலை எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானின் எப் -16 விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. தொடர்ந்து, எல்லையில் பதற்றம் நிலவி வருவதால், காஷ்மீரில் விமான சேவை நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையமும் மூடப்படுகிறது. பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் பஞ்சாபின் அமிர்தசரஸ் பகுதியில் அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்த முயற்சிக்கலாம் என்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், அமிர்தசரஸில் உள்ள பள்ளிகளுக்கு உடனடி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் எல்லைப்பகுதி பாதுகாப்பு குறித்து நேரில் சென்று ஆய்வு நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP