Logo

பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு

மத்திய அமைச்சர் சாவந்த் ராஜினாமா செய்தததையடுத்து, கனரக தொழில், பொதுத்துறை நிறுவனத்துறை கூடுதல் பொறுப்பாக பிரகாஷ் ஜவடேகருக்கு வழங்கப்பட்டுள்ளது.
 | 

பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு

மத்திய அமைச்சர் சாவந்த் ராஜினாமா செய்தததையடுத்து, கனரக தொழில், பொதுத்துறை நிறுவனத்துறை கூடுதல் பொறுப்பாக பிரகாஷ் ஜவடேகருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தனர். தேர்தலுக்கு பிறகு தொகுதி பங்கீட்டில் இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நீடித்து வந்தது. முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க சிவசேனா மறுப்பு தெரிவித்ததையடுத்து பாஜக - சிவசேனா கூட்டணி முறிந்தது. இதையடுத்து சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கோரியது. சிவசேனா கட்சிக்கு ஆதரவு தேவையெனில் பாஜகவின் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நிபந்தனை விதித்திருந்தார்.

இதையடுத்து சிவசேனாவை சேர்ந்த மத்திய கனரக தொழில், பொதுத்துறை நிறுவனத்துறை அமைச்சர் அரவிந்த் சாவந்த் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்திருந்த நிலையில், அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத்தலைவர் ஏற்றுக்கொண்டார். மேலும், அரவிந்த் சாவந்த் வகித்து வந்த கனரக தொழில், பொதுத்துறை நிறுவனத்துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.   மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு அளிக்குமாறு கூறிய  பி ரதமர் மோடியின்  பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். 

Newstm.in 
 

     

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP