850 தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை : டெல்லியில் அதிரடி!

டெல்லியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வரும் தொழிற்சாலைகளை மூட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த போது பலத்த எதிர்ப்பு காணப்பட்டது.
 | 

850 தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை : டெல்லியில் அதிரடி!

டெல்லியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வரும் தொழிற்சாலைகளை மூட மாநகராட்சி அதிகாரிகள் எடுத்துவரும் நடவடிக்கைக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை அடுத்து, மாயாபுரி பகுதியில் சுமார் 850 தொழிற்சாலைகளுக்கு சீல்வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது போலீசாருடன் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்க முயன்றபோது, எதிர்ப்புத் தெரிவித்த தொழிற்சாலைகளின் உரிமையாளர்களும், ஊழியர்களும் கல்வீசித் தாக்கியதால் போலீசாா் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது. தீர்ப்பாயத்தின் உத்தரவுபடி, தொழிற்சாலைகளுக்கு சீல் நடவடிக்கை தொடரும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP