Logo

பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு செருப்படி

உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு காலணியால் தாக்கி கிராம பஞ்சாயத்தில் தண்டனை அளிக்கப்பட்டது.
 | 

பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு செருப்படி

உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு காலணியால் தாக்கி கிராம பஞ்சாயத்தில் தண்டனை அளிக்கப்பட்டது. 

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டு இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு கிராம பஞ்சாயத்து ரூ. 5,100 அபராதம் விதித்து, ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுக்கூடி காலணியால் தாக்குவதை தண்டனையாக வழங்கியது. இதையடுத்து மக்கள் அனைவரும் குற்றஞ்சாட்டப்பட்டவரை சரமாரியாக செருப்பால் தாக்கினர். இதனால் அதிருப்தியடைந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அங்கு விரைந்த காவல்துறையினர், பாலியல் வன்கொடுமை செய்த நபரை கைது செய்தனர். மேலும், கிராம பஞ்சாயத்தில் பங்கேற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க என்னதான் ‘போக்சோ சட்டம்’ அமலில் இருந்தாலும், நாட்டில் ஆண்டுக்கு ஆண்டு பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் பலாத்கார குற்றங்களில் 50 சதவீத குற்றங்கள் தலைநகர் டெல்லி மற்றும் உத்தரபிரதேசம், மராட்டியம், மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் நடைபெறுகிறது.

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP