சபரிமலையைச் சுற்றி மீண்டும் 144 தடை

திங்கட்கிழமை, சிறப்பு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட உள்ளதால், அசம்பாவிதங்களை தடுக்க, இன்று அதாவது நவம்பர் 3-ம் தேதி நள்ளிரவு முதல்பம்பா, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 | 

சபரிமலையைச் சுற்றி மீண்டும் 144 தடை

சபரிமலை ஐய்யப்பன் கோயில் திறக்கப்படவுள்ள நிலையைில் இன்று நள்ளிரவு முதல் 6-ம் தேதி வரை பம்பா, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து வயது பெண்களும் ஐய்யப்பன் கோயிலுக்கு செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதற்கு ஒருபுறம் வரவேற்பும் மறுபுறம் கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. கோர்ட் உத்தரவை அமல்படுத்த, கேரளா அர்சு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 17-ம் தேதி கோயில் திறந்தபோது பெண்கள் பலர் கோயிலுக்குள் செல்ல முயன்றனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. பெரும் போராட்டங்களுக்குப் பிறகு, பெண்கள் கோயிலுக்குள் செல்லாமல் திரும்பி வந்தனர். அசம்பாவிதங்களை தடுக்க கோயிலை சுற்றியுள்ள பத்தனம்திட்டா, நிலக்கல், பம்பை, ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

தற்போது வரும் திங்கட்கிழமை, சிறப்பு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட உள்ளதால், இன்று அதாவது நவம்பர் 3-ம் தேதி நள்ளிரவு முதல் 6-ம் தேதி வரை பம்பா, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP