100 நாட்கள்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வாழ்த்து!

பிரதமராக மோடி பதவியேற்று 100 நாட்கள் ஆன நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், மோடி அரசின் மீது விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.
 | 

கடந்த மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைந்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி பதவியேற்று இன்றுடன் 100 நாட்கள் ஆகிறது.இது தொடர்பாக காங்கிரஸ் எம். பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமராக மோடி பதவியேற்று நூறு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் மோடியின் அரசுக்கு எனது வாழ்த்துக்கள். மோடியின் அரசில் தொடர்ந்து ஜனநாயகம் வீழ்த்தப்பட்டு வருகிறது.

ஊடகங்கள் மீது அடக்கு முறை கையாளப்படுகிறது. சிறந்த தலைமைப் பண்பு இல்லா நிலை உள்ளது. பொருளாதார நிலையை சரிசெய்துகொள்ள சரியான பாதை மற்றும் திட்டங்களும் இந்த நேரத்தில் அவசியமாகிறது" என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP