உத்தவ் தாக்கரேவிற்கு எதிராக குரல் எழுப்பிய முன்னாள் சிவசேனா எம்.எல்.ஏ  ஹர்ஷவர்தன் - ஆத்திரத்தில் சிவசேனா உறுப்பினர்கள்

மகாராஷ்டிரா மாநிலத்திற்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ ஹர்ஷவர்தன் ஜாதவ், உத்தவ் தாக்கரேவிற்கு எதிரான கருத்துக்கள் தெரிவித்ததாக கூறி, அடையாளம் தெரியாத நபர்கள் அவரது வீட்டின் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.
 | 

மகாராஷ்டிரா மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளதை தொடர்ந்து, பாஜக-சிவசேனா கட்சிகள் இணைந்து போட்டியிடவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட, முன்னாள் சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ ஹர்ஷவர்தன் ஜாதவ், அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவிற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த சில நபர்கள், இன்று அதிகாலை வேளையில் அவரது வீட்டின் ஜன்னல்களை கற்களால் தாக்கியுள்ளனர். இது குறித்து கூறிய சிவசேனா கட்சியின் மாவட்டத் தலைவர் எம்.எல்.சி அம்பாதாஸ் தான்வே, "அவரது வீட்டை தாக்கிய நபர்கள் யார் என்ற விபரம் எங்களுக்கு தெரியாது. அவரின் கருத்துக்களுக்கு நிச்சயம் நாங்கள் பதிலடி கொடுப்போம் ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை நாங்கள் காத்திருக்க முடிவு செய்துள்ளோம்" எனக் கூறியுள்ளார்.

ஹர்ஷவர்தன் ஜாதவ் கடந்த ஆண்டு சிவசேனா கட்சியிலிருந்து பதவி விலகியதாகவும், தற்போது அவுரங்காபாத்தின் கன்னாட் தொகுதியில் சுயட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP