குஜராத்தில் தயாராகும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்

தற்போது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமானதாக இருப்பது ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம். இதைவிடப் பெரிதாக உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் குஜராத்தில் கட்டப்பட்டு வருகிறது.
 | 

குஜராத்தில் தயாராகும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்

குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஆமதாபாத்தில் கட்டப்பட்டு வருகிறது. 

தற்போது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாகத் திகழ்ந்து வருவது ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம். இதைவிடப் பெரிதாக உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் குஜராத்தில் கட்டப்பட்டு வருகிறது. 

அகமதாபாத் நகரில் மொடீரா பகுதியில், 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 63 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இந்த மைதானத்தின் கட்டுமான பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தை விட மிகப் பெரியதாக கட்டப்பட்டு வரும் இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் கார்கள், 10 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை நிறுத்தும் வசதிகளும் இருக்கும் என்று குஜராத் மாநித்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP