உ.பி: பெயர் மாறும் அடுத்த நகரம் முஹல்சாரி!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள முஹல்சாரி தாலுகாவின் பெயரை பண்டித் தீனதாயள உபத்யாய தாலுகாவாக பெயர் மாற்ற, அந்த மாநில அமைச்சரவை இன்று ஒப்புதல் அளி்த்துள்ளது.
 | 

உ.பி: பெயர் மாறும் அடுத்த நகரம் முஹல்சாரி!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள  முஹல்சாரி தாலுகாவின் பெயரை பண்டித் தீனதாயள உபத்யாய தாலுகாவாக பெயர் மாற்ற, அந்த மாநில அமைச்சரவை இன்று ஒப்புதல் அளி்த்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து,  முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் உள்ளிட்டோரின் ஆட்சியில், மாநிலத்தில் பெயர் மாற்றப்பட்ட நகரங்களுக்கு மீண்டும் அவற்றின் உண்மையான பெயர்களை சூட்டும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, மாநிலத்தில் முக்கிய நகரங்களில் ஒன்றான அலாகாபாதின் பெயர் பிரயாக்ராஜ் என அண்மையில் மாற்றப்பட்டது. தற்போது, முஹல்சாரி தாலுகாவின் பெயர், பண்டித் தீனதாயள உபத்யாய தாலுகாவாக பெயர் மாற்றப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP