தெலங்கானாவில் பயங்கரம்: ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

ஹைதராபாத் அருகே கச்சிகுடா ரயில் நிலையத்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
 | 

தெலங்கானாவில் பயங்கரம்: ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

ஹைதராபாத் அருகே கச்சிகுடா ரயில் நிலையத்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தெலங்கானா மாநிலம்  ஹைதராபாத் அருகே உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில் கர்னூல் சிட்டி-செகந்திராபாத் ஹன்ட்ரி எக்ஸ்பிரஸ் பயணிகளை இறக்கிவிட்டு, புதிய பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்து கொண்டிருந்த லிங்கம்பள்ளி-ஃபலக்னுமா ரயில் புறநகர் ரயில் நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில், எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகளும், புறநகர் மின்சார ரயிலின் 4 பெட்டிகளும் தடம்புரண்டன. ரயில் பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP