மாணவிகளிடம் தவறாக நடந்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
 | 

மாணவிகளிடம் தவறாக நடந்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில், மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள அரசுப் பள்ளியில் விக்ரம் சங்கர் என்ற 42 வயதான ஆசிரியர், தன் வகுப்பில் படித்து வந்த ஆறாம் வகுப்பு மாணவிகள் 12 பேரிடம் கடந்த சில மாதங்களாக தவறாக நடந்து வந்ததாக தகவல் வெளியானது.

இதையடுத்து பள்ளி நிர்வாகம் ஆசிரியர் குறித்து மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது பெரும்பாலும் உணவு இடைவேளையின்போது ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து வந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இதையடுத்து போலீசார் ஆசிரியரை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP