மத்திய பிரதேச மாநிலத்தில் மின்சார தட்டுப்பாடு...!

உரத்தட்டுப்பாட்டை தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போது மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் மத்திய பிரேதசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
 | 

மத்திய பிரதேச மாநிலத்தில் மின்சார தட்டுப்பாடு...!

உரத்தட்டுப்பாட்டை தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போது மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் மத்திய பிரேதசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. 

மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் ஆட்சியில் அமர்ந்த சில தினங்களுக்குள்  உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்தது. இதனால் விவசாயிகள் அதிக விலை கொடுத்து உரங்க‌ளை வாங்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அனல் மின் உற்பத்தி நிலையங்களில் உள்ள நிலக்கரி இன்னும் ஒரிரு நாட்கள் தான் வரும் என்பதால் அதன் பிறகு மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP