கேரளாவிலும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்!

சமுக வலைதளங்கள் மூலம் பெண்களிடம் பழகி அவர்களை மிரட்டி 50க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 | 

கேரளாவிலும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்!

சமுக வலைதளங்கள் மூலம் பெண்களிடம் பழகி அவர்களை மிரட்டி 50க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் ஏத்துமானூர் பகுதியில் உள்ள அரிபரம்பு என்ற பகுதியை சேர்ந்தவர் பிரதீஷ் குமார். 25 வயதான இவர் சமுக வலைதளங்கள் மூலம் திருமணமான பெண்களிடம் நட்பு ஏற்படுத்தி கொண்டு அவர்களது செல்போன் எண்களை வாங்கியுள்ளார்.

பின்னர் அவர்களின் குடும்ப பிரச்சைகளை அறிந்து கொண்டு அவர்களின் கணவர்கள் குறித்து தவறான தகவல்களை கூறி வந்துள்ளார். இதன்படி அவர்களது கணவர்கள் பெயரில் முகநூலில் போலி முகவரி ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களது கணவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளது போல் அதில் பதிவு செய்துள்ளார்.

பின்னர் தான் நட்பாக்கி கொண்ட குடும்ப பெண்களிடம் ஆறுதல் கூறுவது போல் ஏதாவது ஒரு இடத்திற்கு வர சொல்லி அவர்களிடம் தவறாக நடந்துள்ளார். இது போல் 50க்கும் மேற்பட்ட பெண்களிடம் அவர் தொடர்பு வைத்துள்ளார்.

பிரதீஷ் குமாரின் செயலுக்கு ஒத்துழைக்க மறுக்கும் பெண்களை மிரட்டி தன்னிடம் அந்த பெண்ணும் தானும் இருக்கும் அந்தரங்க படங்கள் உள்ளது என்றும் தன்னுடன் ஒத்தழைக்க மறுத்தால் அந்த படங்களை குறிப்பிட்ட அந்த பெண்ணின் கணவருக்கு அனுப்பி விடுவதாக மிரட்டி அவர்களை பணிய வைத்துள்ளார்.

இந்நிலையில் இவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஏத்துமானூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதையடுத்து பிரதீஷ் குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது மேற்கண்ட தகவல்கள் வெளிவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP