Logo

காகித தட்டுப்பாடு: ஜம்மு - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க புதிய சட்டம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க மத்திய அரசு ஓர் புதிய சட்டத்தை வகுத்து உள்ளது.
 | 

காகித தட்டுப்பாடு: ஜம்மு - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க புதிய சட்டம்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க மத்திய அரசு ஓர் புதிய சட்டத்தை வகுத்துள்ளது. அதிகரித்து வரும் காகித தட்டுப்பாடு காரணமாக இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி நெடுஞ்சாலையில் பயணிப்போரின் உள்ளங்கையில் நீல மையில் சீல் குத்தப்படுகிறது.

இந்த முறைக்கு உமர் அப்துல்லா அதிருப்தி தெரிவித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் அவர், "ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நெடுஞ்சாலையை பயன்படுத்த மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களது உள்ளங்கையில் மை ஸ்டாம்ப் குத்தப்படுகிறது. இதனை நான் என்ன சொல்வதென்று தெரியவில்லை. மனிதத்தன்மை அற்ற மத்திய அரசின் இச்செயலால் நான் கோபம் அடைந்துள்ளேன்" என உமர் அப்துல்லா தன் டுவிட்டரில் பதிவிட்டு, ஜம்மு காஷ்மீர் குடிமகன் ஒருவரது சீல் குத்திய உள்ளங்கை படத்தையும் அதில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் அங்கு பயணிகளுக்கு காகித ஸ்லிப் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP