ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் இந்திய நிலைகள் உள்ள கிராமப்பகுதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
 | 

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் இந்திய நிலைகள்  உள்ள கிராமப்பகுதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளும் அத்து மீறி எல்லையோர கிராமங்கள் மற்றும் இந்திய நிலைகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சஜ்வான் செக்டாா் பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தினா் இன்று காலை சிறிய ரக பீரங்கிகள் மற்றும் கையெறி குண்டுகளை பயன்படுத்தி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது.

இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP