Logo

நொய்டா: பொது இடங்களில் தொழுகை நடத்த தடை..!

நொய்டாவில் இஸ்லாமியர்கள் பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் தொழுகை நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும், தொழில் நிறுவனங்கள் பொது இடங்களில் தொழுகை நடத்த அனுமதி வழங்க கூடாது எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
 | 

நொய்டா: பொது இடங்களில் தொழுகை நடத்த தடை..!

நொய்டாவில் இஸ்லாமியர்கள் பொதுஇடங்களில் தொழுகை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில், ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. அங்கு பணியாற்றும் இஸ்லாமியர்கள் அங்குள்ள பொதுஇடத்தில் கூடி தொழுகை நடத்துவது வழக்கம். இந்நிலையில், நொய்டாவில் பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் தொழுகை நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேலும், அப்பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் பொது இடங்களில் தொழுகை நடத்த அனுமதி வழங்கக் கூடாது எனவும், மீறி தொழுகை நடத்தினால் அதற்கு அந்த நிறுவனமே பொறுப்பு எனவும், தொழுகை மட்டுமின்றி வேறு எந்த மத நடவடிக்கைகளையும் பொது இடங்களில் நடத்த அனுமதி கிடையாது எனவும் அப்பகுதியில் உள்ள நிறுவனங்களுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP