மகாராஷ்டிரா தேர்தல் கருத்து கணிப்புகள் - வெற்றியைத் தழுவுகிறது பாஜக-சிவசேனா கூட்டணி!!

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் நேற்று (அக்டோபர் 21) முடிவடைந்ததை தொடர்ந்து, கருத்து வேறுபாடுகளில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி கட்சி ஆட்சியை பிடிக்குமா, தன் பதவியை தக்க வைத்து கொள்ளுவாரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் என்பது போன்ற பெரும் கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.
 | 

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், தனி தனியாக போட்டியிட்ட பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள், இந்த ஆண்டிற்கான தேர்தலை இணைந்து எதிர்கொண்ட நிலையில், மொத்தமாக போட்டியிட்ட 288 இடங்களில் 230 இடங்களில், இந்த கூட்டணி  வெற்றிப்பெற்றிவாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன. 

தேர்தலுக்கான நாள் நெருங்கும் கடைசி நேரத்தில், தேர்தல் பிரச்சாரங்களில் மும்மரமாக ஈடுபட்ட காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சி ,48 இடங்களில் வெற்றி பெறலாம் என கூறப்படுகின்றது.

தேர்தலில் போட்டியிட்ட மற்ற கட்சிகள் ,288 இடங்களில் 10 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தேர்தலின் முடிவுகள் வரும் வியாழன் அன்று (அக்டோபர் 24) வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP