கேரளா- கடத்தி வரப்பட்ட 8 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 8 காேடி ரூபாய் மதிப்புள்ள கடத்தப்பட்ட தங்க கட்டிகள் பிடிப்பட்டது.
 | 

கேரளா- கடத்தி வரப்பட்ட 8 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 8 காேடி ரூபாய் மதிப்புள்ள கடத்தப்பட்ட  தங்க கட்டிகள் பிடிப்பட்டது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இன்று காலை ஓமன் நாட்டில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை வருவாய் புலனாய்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்திருந்த 2 பயணிகளை வருவாய் புலனாய்பு பிரிவு அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ தங்க கட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்த தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன் தங்கம் கடத்தி வந்த வழக்கில் விமான நிலைய  ஊழியரே உடந்தையாக செயல்பட்டதையடுத்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP