கேரள சட்டசபையில் கடும் அமளி - சட்டசபை ஒத்திவைப்பு

கேரள சட்டசபையில், சபரிமலை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சட்ட சபை இன்றும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டன.
 | 

கேரள சட்டசபையில் கடும் அமளி - சட்டசபை ஒத்திவைப்பு

கேரள சட்டசபையில், சபரிமலை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சட்ட சபை இன்றும் ஒத்திவைக்கப்பட்டது.

கேரளா சட்ட சபை கூட்டத் தொடர் கடந்த 28ம் தேதி  தொடங்கியது. முதல் நாளில் கங்கிரஸ் எம்எல்ஏக்கள் சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கைகளுக்கும், பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகளுக்கும் கண்டனம் தெரிவித்து முழுக்கம் எழுப்பினர்.  இதை தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்றும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்ஏக்கள் சபரிமலை பிரச்சினை தொடர்பாக மாநில அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள்.மேலும் கோரிக்கைகள் அடங்கிய பேனருடன் சபாநாயகர் அருகே சென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

அப்போது பேசிய முதல்வர் பினராயி விஜயன் காங்கிரசாருக்கும், பா.ஜனதா கட்சியினருக்கும் ரகசிய கூட்டணி இருப்பதாக குற்றம் சாட்டினார். உடனே எதிர்கட்சி தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ரமேஷ்சென்னிதலா பினராயி விஜயனுக்கும், ஆர்.எஸ்.எஸ்.க்கும் தொடர்பு உள்ளது என்று கூறியதால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும், கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்களும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சபையில் தொடர்ந்து அமளி நிலவியதால் சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் அறிவித்தார். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP