நம்பிக்கை வாக்கெடுப்பு : கர்நாடக முதல்வருக்கு ஆளுநர் கெடு!

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை மதியம் 1:30 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமிக்கு, அம்மாநில ஆளுநர் வாஜுபாய் வாலா கெடு விதித்துள்ளார்.
 | 

நம்பிக்கை வாக்கெடுப்பு : கர்நாடக முதல்வருக்கு ஆளுநர் கெடு!

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை மதியம் 1:30 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமிக்கு, அம்மாநில ஆளுநர் வாஜுபாய் வாலா கெடு விதித்துள்ளார். இதுதொடர்பாக அவர், குமாரசாமிக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

முன்னதாக, முதல்வர் குமாரசாமி, மாநில சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவிருந்தார். இதுதொடர்பான தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றபோது, காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் பல்வேறு காரணங்களை கூறி, தொடர்ந்து அமலில் ஈடுபட்டனர். 

இதையடுத்து, இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாது எனவும், அவை நாளைக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் சபாநாயகர் ரமேஷ் குமார் கூறினார்.

சபாநாயகரின் இந்த முடிவை கடுமையாக கண்டித்துள்ள பாஜக எம்எல்ஏ.,க்கள், அவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாததை கண்டித்தும், இதுகுறித்த ஆளுநரின் கடிதத்துக்கு சபாநாயகர் உரிய பதிலளிக்க வலியுறுத்தியும், சட்டப்பேரவைக்கு உள்ளேயே அவர்கள் தர்ணா மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP