நோயாளியின் வயிற்றில் இரும்பு புதையல்- வயிறா? உண்டியலா?

ராஜஸ்தான் மாநிலத்தில் நோயாளியின் வயிற்றில் இருந்து 80 வகையான இரும்பு பொருட்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
 | 

நோயாளியின் வயிற்றில் இரும்பு புதையல்- வயிறா? உண்டியலா?

ராஜஸ்தான் மாநிலத்தில் நோயாளியின் வயிற்றில் இருந்து 80 வகையான இரும்பு பொருட்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் மாவட்டத்தில் கடுமையான வயிற்று வலியுடன் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.

அவரை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரணம் நோயாளியின் வயிற்றில் ஏராளமான இரும்பு பொருட்கள் இருந்துள்ளது.

உடனே அந்த நோயாளியின் வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில் நோயாளியின் வயிற்றில் இருந்து புகை பிடிக்கும் குழாய், நாணயங்கள், ஆணிகள், சாவிகள் உள்பட 80 வகையான இரும்பு பொருட்கள் அகற்றப்பட்டன.

அதையடுத்து நோயாளியின் உறவினர்களிடம் மருத்துவர்கள் மேற்கொண்ட விசாரணையில் அந்த நோயாளி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், எந்த இரும்பு பொருட்களை பார்த்தாலும் எடுத்து விழுங்கி விடுவார் என்பதும் தெரியவந்தது. அறுவை சிகிச்சை மேற்கொண்டதையடுத்து தற்போது அந்த நோயாளி நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP