தக்காளியால் அடித்துக்கொண்டு ஹோலி கொண்டாட்டம்

கொண்டாட்டதின் ஒரு பகுதியாக, அகமதாபாத்தில் தக்காளிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி கொண்டாடி வருகின்றனர். ஒரு இடத்தில் கிலோ கணக்கில் கொட்டப்பட்ட தக்காளியில் உருண்டு புரண்டு தக்காளி ஜூஸ் போல் ஆகிவிட்டனர்.
 | 

தக்காளியால் அடித்துக்கொண்டு ஹோலி கொண்டாட்டம்

ஹோலி பண்டிகையின் 2வது நாள் கொண்டாட்டம் வடஇந்தியாவில் படுஜோராக நடந்து வருகிறது. டெல்லி உள்பட வடஇந்தியா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் ஹோலி பண்டிகையின் முதல் நாள் கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது.

இதனைத் தொடர்ந்து, வடஇந்தியாவில் ஹோலி பண்டிகையை இரண்டாவது நாளாக கொண்டாடி வருகின்றனர். விதவிதமான கலர் பொடிகளை தூவி மக்கள் தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கொண்டாட்டதின் ஒரு பகுதியாக, அகமதாபாத்தில் தக்காளிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி கொண்டாடி வருகின்றனர். ஒரு இடத்தில் கிலோ கணக்கில் கொட்டப்பட்ட தக்காளியில் உருண்டு புரண்டு தக்காளி ஜூஸ் போல் ஆகிவிட்டனர்.

மேலும், கோரக்பூரில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய ஹோலி கொண்டாட்டத்தில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத் கலந்து கொண்டு ஹோலி கொண்டாடினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP