ஹிமாச்சலில் கடும் பனிப்பொழிவு - சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு!

சிம்லா, மணாலி, கல்பா, கெய்லாங், டல்ஹவுசி உள்ளிட்ட நகரங்களில் கடும் பனிப் பொழிவு பதிவாகியுள்ளது.
 | 

ஹிமாச்சலில் கடும் பனிப்பொழிவு - சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடும் பனிப் பொழிவு நிலவி வருகிறது.

சிம்லா, மணாலி, கல்பா, கெய்லாங், டல்ஹவுசி உள்ளிட்ட நகரங்களில் கடும் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. சாலைகள், கட்டிடங்கள், மரங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களும் பனி போர்த்தி இயற்கை அழகுடன் காணப்படுகின்றன. சிம்லா உள்ளிட்ட சில நகரங்களில் சாரல் மழையும் காணப்படுகிறது.

பழங்குடியினப் பகுதியான லஹால் - ஸ்பிட்டி மாவட்டத்துக்குட்பட்ட கெய்லாங் நகரில் வெப்பநிலை மைனஸ் 9.8 டிகிரியாக பதிவாகியுள்ள நிலையில் அங்கு உறைபனி நிலவி வருகிறது. இதையடுத்து சுற்றுலா பயணிகளும், பனிச்சறுக்கு வீரர்களும் இங்கு வரத் தொடங்கியுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP