Logo

7-10ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் - பாஜக தேர்தல் அறிக்கை வாக்குறுதி

தெலுங்கானா தேர்தல் வாக்குறுதியாக 7ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இலவச சைக்கிள், பட்டதாரி மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் என பல்வேறு சலுகைகளை பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 | 

7-10ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் - பாஜக தேர்தல் அறிக்கை வாக்குறுதி

தெலுங்கானாவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு பசுமாடுகள் வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

தெலுங்கானா மாநிலத்தில் டிசம்பர் 7-ந்தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை பாஜக மாநில தலைவர் லட்சுமண் நேற்று வெளியிட்டார். அந்த அறிக்கையில், " விழக்காலங்களில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக பசுமாடுகள் வழங்கப்படும். விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். பணம் கொடுத்து மதம் மாறுவதை தடுக்க மதமாற்று தடை சட்டம் கொண்டு வரப்படும்.

7ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும். பட்டம் மற்றும் முதுநிலை படிப்பு மாணவிகளுக்கு 50சதவீத மானியத்தில் ஸ்கூட்டிகள் வழங்கப்படும். பட்டதாரி மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும். மாநிலத்தில் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளை பேசுவதற்கு வசதியாக ரூ.100 கோடியில் மொழியியல் போர்டு வைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தெரிவித்துள்ளது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP