5 மாடி கட்டிடத்தில் தீவிபத்து- இரண்டு பெண்கள் பலி

மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.
 | 

5 மாடி கட்டிடத்தில் தீவிபத்து- இரண்டு பெண்கள் பலி

மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் போரி மொஹலா பகுதியில் புதிதாக 5 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு திடீரென மின்சார வயர்களில் தீப்பொறி ஏற்பட்டது.

இதனால் அந்த கட்டிடத்தில் இருந்த மர பொருட்கள் தீயில் எரிய தொடங்கின. இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கட்டிடத்தில் சிக்சியிருந்த 11 பேரை பத்திரமாக மீட்டனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. அப்போது அடுக்குமாடி கட்டிடத்தின் 4 மாடியில் 2 பெண்கள் மூச்சு திணறி இறந்து கிடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP