ஆந்திராவில் தந்தையும் மகளும் ஒரே தொகுதியில் போட்டி

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் தந்தையும் மகளும் நேருக்கு நேர் மோதுகின்றனர். ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளது.
 | 

ஆந்திராவில் தந்தையும் மகளும் ஒரே தொகுதியில் போட்டி

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் தந்தையும் மகளும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.

ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளது. இம்மாநிலத்தில்
தெலுங்கு தேசம், காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, பாஜக மற்றும் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி ஆகியவை தனித்து போட்டியிடுவதால் ஐந்துமுனை போட்டி ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் கிஷோர் சந்திரதேவ் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். இவர் அரக்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி கிஷோரின் மகள் ஸ்ருதி தேவியை வேட்பாளராக அறிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக கிஷோரின் அரசியல் பணிக்கு உதவியாக இருந்து அவருடைய அரசியல் வாரீசாக இருந்த ஸ்ருதி தற்போது அவருக்கு எதிராகவே தேர்தலில் போட்டியிடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP